மயிலாடுதுறையிலிருந்து தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ளது.
சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை உதைத்த தலம். இத்தலத்தில் உள்ள காலசம்காரமூர்த்தி சிறப்பு பெற்றவர். அமாவாசையை பவுர்ணமி என்று கூறிய அபிராமி பட்டருக்காக உமாதேவியார் நிலவு காட்டிய தலம். அபிராமி பட்டர் பாடிய பாடல்கள் அபிராமி அந்தாதி எனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார். |